இன்று முதல் அமெரிக்காவில் அகதிகள் நுழையத் தடை விதிக்கப்பட்டது.

அரசியல் இந்தியா உலகம் சிறப்பு செய்திகள் முதன்மை செய்தி வட அமெரிக்கா

இன்று ஜனவரி 27ம் தேதி முதல் அமெரிக்காவில் அகதிகள் நுழைவுக்கு தடை விதிக்கப்படுகிறது. அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் 2வது முறையாக பதவியேற்ற பிறகு, பல அதிரடி உத்திகள் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கான அடிப்படையில், அமெரிக்கா உலக சுகாதார மையத்திலிருந்து வெளியேறி, பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தையும் விலக்கியுள்ளது. மேலும், உக்ரைன்-ரஷ்யா போரின் சூழலில், புதின் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்க வேண்டும். ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என அதிரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், அமெரிக்க குடியுரிமை பெறுவதற்கான கடுமையான கட்டுப்பாடுகளுக்கு அவர் கையெழுத்திட்டுள்ளார். அமெரிக்காவில் அகதிகள் குடியேற்றத்தை தற்காலிகமாக நிறுத்துவதற்கான நிர்வாக உத்தரவில் அவர் கையெழுத்திட்டுள்ளார். இதற்கமைய, இன்று ஜனவரி 27ம் தேதி முதல் அகதிகள் வருகைக்கு தடைவிதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கெடுவுக்கு முன்னதாக, அமெரிக்காவுக்குள் நுழைய முறையான அனுமதிப் பெற்ற அகதிகள் அமெரிக்கா செல்ல அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது. இந்நிலையில், ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட அகதிகளின் பயணத்தை டிரம்ப் நிர்வாகம் நிறுத்திவிட்டது. அமெரிக்காவிற்கான அகதிகள் வருகை மறு உத்தி வரும்வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *