திருப்பதி திருமலை கோயிலில் ஒரு நாள் உண்டியல் காணிக்கை 3 கோடியை தாண்டியுள்ளது

ஆன்மீக தளங்கள் ஆன்மீகம் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் கோயில்கள் செய்திகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். வெள்ளிக்கிழமையான நேற்று 70,353 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 25,636 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் கோயில் உண்டியலில் ரூ.3.65 கோடி காணிக்கை செலுத்தினர். சனிக்கிழமையொட்டி இன்றும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனர்.இன்று காலை நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 6 அறைகளில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். இவர்கள் 8 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 1 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *