சித்திரக் கதைகளில் ஒரு புரட்சி - நிலாகாமிக்ஸ்.காம்

சித்திரக் கதைகளில் ஒரு புரட்சி – நிலாகாமிக்ஸ்.காம்

Nri தமிழ் வணிகம்

முன்னொரு காலமிருந்தது. தொழில்நுட்பம் நம்மை விழுங்கியிருக்காத, நம் சந்தோஷங்களை நாமே தேடித் திரிந்திருந்த, கலப்படமற்ற உணர்வுகளை நாம் கொண்டிருந்ததான, அப்பாவித்தனத்தை தொலைத்திருக்காத ஒரு காலம்.

அந்த காலத்தில் நம்முடனே பயணித்து, நம் நேரச் சலிப்பை போக்கி, நம்மை சிரிக்க வைக்கவும், நம்மை மகிழ வைக்கவும், நம்மை காத்திருக்க வைக்கவுமாய் நமக்கான பொழுதுபோக்காய் அன்றைய காலகட்டத்தில் இருந்த பலவனவற்றுள் முதன்மையான இடத்தைப் பிடிப்பது சித்திரக்கதைகள்.

அன்றைய தினசரிகளில் வெளியாகி வந்திருந்த சிறு தொடர்கதைகள் தொடங்கி, வார இதழ்கள், மாத இதழ்கள், குழந்தைகளுக்கான இதழ்கள் என அனைத்தையும் ஆக்கிரமித்திருந்த சித்திரக்கதைக்கு சிறார்கள் முதல் முதியோர்கள் வரை அனைவருமே இரசிகர்களாய் இருந்திருந்தது மறுக்க முடியாத உண்மை.

வெறும் கதையாய் படிப்பதைக் காட்டிலும், படக்கதையாய் அதைப் பார்த்துப் படிப்பதே சிறார்களுக்கு ஒரு நல்ல புரிதலையும், ஆழ்ந்த ஆர்வத்தையும் ஏற்படுத்தும்.
நம் சிறு வயதுகளில் பெருமொரு வாசிப்பை உருவாக்கியெடுத்த பங்கு படக்கதைகளுக்கே.

நம் தலைமுறையோடு நாம் இழந்திட்ட அந்த சந்தோஷத்தை, தொழில்நுட்பம் விழுங்கி இருக்கும் இன்றைய சிறார்களிடம் மீண்டும் ஏற்படுத்திடும் முயற்சியை நிலாகாமிக்ஸ்.காம் துவங்கியிருப்பது நம் அனைவருக்குமான ஆறுதல்.

நம் தமிழின் பெருமைகளான பல வரலாற்று கதைகளையும் நூல்களையும், சித்திரக்கதைகளாய் மாற்றி அளிக்க முனையும் அவர்களது முயற்சி பெரிதும் பாராட்டப்பட வேண்டியது. முதல் கட்டமாய் தமிழ் இலக்கியத்தின் பெருமையான அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் புதினத்தை சித்திரக் கதைகளாக தமிழிலும் , ஆங்கிலத்திலும் வெளியிட்டுள்ளனர். மேலும் இதையே பொன்னியின் செல்வன் அனிமேஷன் தொடராகவும் அவர்கள் வெளியிட திட்டமிட்டுள்ளனர் .இது நிச்சயம் நம் குழந்தைகளுக்கு நாம் சொல்ல விட்டுப் போன நம் வரலாற்றை அவர்களாய் தெரிந்துணர வழிவகுக்கும்.

நிலாகாமிக்ஸ்.காம் இன்றே சென்று நம் வரலாற்றுக் கதைகளை உங்கள் குழந்தைகளுக்கு வாங்கித் தந்து குடும்பத்துடன் படித்து மகிழுங்கள்.

நிலாகாமிக்ஸ்.காமின் பணி சிறக்கட்டும்.

மேலும் வாசிக்க : https://nritamil.com/business-directory/6241/nila-comics/

Leave a Reply

Your email address will not be published.