சென்னை வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் மற்றும் உலகத் தமிழர் பொருளாதார அற நிறுவனத்தின் தலைவருமான டாக்டர் வி.ஆர்.எஸ். சம்பத், கடந்த செப்டம்பர் 9, 2024 அன்று மொரீஷியஸ் நாட்டின் பிரதமர் மாண்புமிகு பிரவீந்த் குமார் ஜக்நாத் அவர்களை மொரீஷியஸ் பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பில், 2024 ஆம் ஆண்டு நவம்பர் 15 மற்றும் 17 ஆம் தேதிகளில் கோலாலம்பூரில் நடைபெறவுள்ள உலகத் தமிழர் பொருளாதார மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள பிரதமர் ஜக்நாத் அவர்களை அழைப்பு விடுத்தார். இந்த மாநாட்டில் உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள தொழில்துறை சார்ந்த தமிழர்கள் கலந்து கொண்டு, பொருளாதார வளர்ச்சிக்கான திட்டங்களை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்படும். தமிழ்நாடு மற்றும் மொரீஷியசின் உறவுகளை மேம்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து இந்த சந்திப்பில் விவரிக்கப்பட்டது. குறிப்பாக, தமிழர்களின் மேம்பாடு, கல்வி மற்றும் கலை – கலாச்சார உறவுகள் பற்றிய விவரங்கள் தெரிவிக்கப்பட்டன. சென்னையில் மருத்துவ சிகிச்சை மற்றும் உயர்கல்வி படிப்புகளை மேற்கொள்ளும் பயணிகளின் வசதிக்காக, மொரீஷியசில் இருந்து வாரம் இருமுறை விமான சேவையை விரிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இந்த நடவடிக்கைகள் மூலம், தமிழர்களின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் என்றும் மேலும், மொரீஷியசுடன் தமிழர்களுக்கு உள்ள உறவு மேலும் வலுப்படுத்தும் வாய்ப்புகளை உருவாக்கும் . இதனால், இரு நாடுகளுக்கிடையிலான உறவுகள் மேலும் வலுப்பெறும் என கூறினார்.
தமிழகத்தில் உள்ள உலக அளவிலான அதிநவீன சிகிச்சை வசதிகள் மற்றும் மருத்துவ சேவைகள் குறித்தும் , குறிப்பாக தகவல்தொழில்நுட்பக் கல்வி, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கல்வி போன்றவற்றின் முக்கியத்துவம் பற்றியும். இவை அனைத்தும் தமிழ்நாட்டின் கல்வி வளங்களை மேலும் மேம்படுத்த உதவும் என்றுகூறினார்.தமிழ்நாடு அரசு பல சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்றும் மொரீஷியஸ் பிரதமரை தமிழ்நாட்டுக்கு நேரில் வருகை தர அழைப்பு விடுத்தார். அவர் அதை அன்புடன் பரிசீலிக்கிறார் என்று கூறினார். தமிழ்நாட்டில் மொரீஷியஸ் தொழில்துறையினர் முதலீடு செய்யவும், கல்வி வளங்களைப் பகிரவும் பிரதமரிடம் கோரிக்கை முன்வைத்தார். இதற்காக ஒரு சிறப்பு நிகழ்வு நடத்த வேண்டும் என்றும் கேட்டார். இதனை, பிரதமர் தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். 30 நிமிடங்களுக்கு மேலாக நடந்த இந்த சந்திப்பில், வி.ஆர்.எஸ். சம்பத் பல்வேறு விஷயங்களை பிரதமரிடம் விளக்கினார். மொரீஷியஸ் பிரதமர் ஆர்வத்துடன் வி.ஆர்.எஸ். சம்பத் அவர்களுடன் பல தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் பரமசிவம் பிள்ளை வையாபுரி அவரும் உடனிருந்தார்.