பொதுத் தேர்வுகளில் மாநில, மாவட்ட அளவில் வெற்றிப் பெற்ற மாணவர்களை நடிகர் விஜய் நாளை சந்திக்கிறார்

அரசியல் இந்தியா சினிமா செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள்

விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக 10. 12-ம் வகுப்புத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ரொக்க பரிசு வழங்கும் நிகழ்ச்சி நாளை நடைபெற இருக்கிறது.
இதற்காக நீலாங்கரை பகுதியில் பிரமாண்டமான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. விஜய் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை நேரில் சந்தித்து இந்த சான்றிதழையும், ரொக்கப் பரிசையும் வழங்க இருக்கிறார். தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களை 234 தொகுதிகளிலும் கணக்கெடுத்து அவர்களைப் பெற்றோர்களுடன் நாளை நீலாங்கரை பகுதியில் இருக்கும் ஆர்.கே. கன்வென்சன் சென்டருக்கு வரவழைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. பெற்றோர்கள், மாணவர்களுக்கு உரிய அடையாள அட்டை வழங்கப்பட்டிருக்கிறது.
நாளை நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்காக இன்று முதலே நீலாங்கரை பகுதியில் சுவர் ஓவியங்கள் அலங்கார ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. தனது கட்அவுட்கள் எதுவும் வைக்கக்கூடாது என்று விஜய் தரப்பில் கூறப்பட்டிருப்பதால் சுவர் ஓவியங்கள் வரையும் பணியில் ரசிகர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் மாணவ, மாணவியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட் டுள்ளன.
இது பற்றி விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் கூறியதாவது:-
மாணவர்கள் அனைவரும் பெற்றோர்களுடன் வந்து மேல்மருவத்தூர், தாம்பரம் பகுதியில் இருக்கும் குறிப்பிட்ட 2 மண்டபங்களில் வந்து தங்கி தயாராகி விடுவார்கள். அங்கேயே காலை உணவை முடித்துக் கொண்டு வண்டலூர், கேளம்பாக்கம் வழியாக வந்து நீலாங்கரையை அடைந்து விடுவார்கள். அனைவருக்கும் சினாக்ஸ், தண்ணீர் பாட்டில் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை 8.30 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கி சரியாக 1 மணிக்குள் அனைவருக்கும் 12 வகை காய்கறிகளோடு சைவ விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

Leave a Reply

Your email address will not be published.