ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டத்தை அஇஅதிமுக அதரிக்கிறது; பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

அரசியல் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்திற்கு ஒன்றாக தேர்தல் நடத்த வழிவகை செய்யும் ஒரே நாடு, ஒரே தேர்தல் கொள்கையை ஆதரிப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
2024 மக்களவைத் தேர்தலுடன், சட்டமன்றத்திற்கும் தேர்தல் வரலாம் என ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி பேசி வந்தார். இந்த நிலையில், இதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆராய மத்திய அரசு குழுவை அமைத்துள்ளது.
இதுதொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், “ஒரே நாடு ஒரே தேர்தல் கொள்கையை அதிமுக தீவிரமாக ஆதரிப்பதாக குறிப்பிட்டுள்ளார். ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறை கூட்டாட்சி அமைப்பை வலுப்படுத்தும் என்றும், இது நடைமுறைக்கு வந்தால் ஜனரஞ்சக திட்டங்களை விட வளர்ச்சியே முக்கியமாக இருக்கும் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
எந்த அரசும் கொள்கைகளை திறம்பட செயல்படுத்துவதற்கு நீண்டகால இடையூறு இல்லாத ஆட்சியை வழங்கும் என்றும், நாட்டின் வளர்ச்சியின் வேகத்தை அதிகரிப்பதுடன், அரசியல் ஸ்திரத்தன்மையைத் தவிர்க்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஒரே நாடு ஒரே தேர்தல் கொள்கை தேர்தல் நேரத்தையும், பெரும் செலவை மிச்சப்படுத்தும் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *