கிரிக்கெட் உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் 70 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு நான்காவது முன்னேறியது இந்திய அணி

இந்தியா உலகம் கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி விளையாட்டு

2023 ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரின் இன்று நடைபெற்ற முதல் அரையிறுதியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதியது. இப்போட்டியில் நியூசிலாந்து அணியை 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. மும்பையில் நடைபெற்று வரும் முதல் அரையிறுதி போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 397 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக விராத் கோஹ்லி 117, ஷ்ரேயாஸ் அய்யர்105, ஷுப்மன் கில் 80 ரன்கள் எடுத்தனர். நிசிலாந்து வீரர்கள் டிம் சவுத்தீ 3 விக்கெட்டுகளையும், டிரென்ட் போல்ட் 1 விக்கெட் வீழ்த்தினர்.பின்னர் 398 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 327 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக டேரில் மிட்செல் 134, கேன் வில்லியம்சன் 69 ரன்கள் எடுத்தனர். இந்திய வீரர்கள் ளையும், பும்ரா, சிராஜ், குல்தீப் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தி பிரமிப்பை ஏற்படுத்தினர். உலக கோப்பை முதல் அரையிறுதி போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் கேப்டன் ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி 4-வது முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *