தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் மாதவன் இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களில் முன்னணி நிறுவனமாக இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனம் முக்கிய இடத்தை பெற்றுள்ளது. பூனேவில் உள்ள இந்த நிறுவனம் மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வருகிறது.
இந்நிலையில் புனேவைச் சேர்ந்த இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் (FTII) தலைவராகவும், அதன் நிர்வாகக் குழுவின் தலைவராகவும் நடிகரும் திரைப்படத் தயாரிப்பாளருமான மாதவன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியத் திரையுலகில் தனக்கென தனி இடத்தைப் பிடித்த நடிகர் மாதவன் என்பது குறிப்பிடத்தக்கது.