தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென்று தனி முத்திரையை பதித்து, மக்களால் கொண்டாடப்பட்ட விஜயகாந்த், கடந்த மாதம் 28 ஆம் தேதி காலமானார். அவரது உடல், தீவுத்திடதில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. லட்சக்கணக்கான தொண்டர்களும் பொதுமக்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் என தமிழ் திரையுலகின் பெரும்பாலான நட்சத்திரங்கள் அனைவரும் நேரில் வந்து விஜயகாந்த் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.
படிப்பிடிப்பு பணிகளில் இருந்த சூர்யா, நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி உள்ளிட்டோர், சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்துக்கு சென்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், வரும் 19 ஆம் தேதி விஜயகாந்துக்கு நடிகர் சங்கம் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு திட்டமிட்டப்படி நடத்தப்படும் என்று நடிகர் விஷால் தெரிவித்தார்.
இதில், அனைத்து நடிகர்களும் பங்கேற்கு அஞ்சலி செலுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

