ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வேண்டும்; கடும் எதிர்ப்புகளுக்கிடையே சட்டசபையில் நிறைவேறிய தீர்மானம்

அரசியல் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் நீதி மன்றம் மற்றவை முதன்மை செய்தி

ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என வலியுறுத்தி அம்மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பின் 370-வது சட்டப்பிரிவை மத்திய அரசு நீக்கியது. மாநிலமாக இருந்த ஜம்மு காஷ்மீர் 2 யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது. ஜம்மு காஷ்மீர் ஒரு யூனியன் பிரதேசமாகவும், லடாக் மற்றொரு யூனியன் பிரதேசமாகவும் பிரிக்கப்பட்டது. இதில் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் மட்டும் சட்ட சபை தொகுதிகள் உள்ளன. லடாக்கில் சட்டசபை தொகுதிகள் இல்லை. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள 90 சட்டசபை தொகுதிக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி- காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது.
ஜம்மு காஷ்மீர் முதலமைச்சராக தேசிய மாநாடு கட்சி துணைத் தலைவர் உமர் அப்துல்லா பதவி ஏற்றார். மத்திய பாஜக அரசால் கடந்த 2019 ஆம் ஆண்டு சிறப்பு அந்தஸ்து [சட்டப்பிரிவு 370] ரத்து செய்யப்பட்டு, இரு யூனியன் பிரதேசங்களாக (ஜம்மு- காஷ்மீர், லடாக்) பிரிக்கப் பட்ட பிறகு நடைபெற்ற முதல் சட்டமன்ற மன்ற தேர்தல் இதுவாகும். இந்நிலையில், ஜம்மு காஷ்மீருக்கு நீக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மீண்டும் வழங்க வலியுறுத்தி அம்மாநில சட்டசபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு பாஜக எம்.எல்.ஏ.க்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *