மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வரும் டிசம்பர் 27-ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு வருகை தரவுள்ளார். அவர் முதலில் விமானம் மூலம் சென்னை வந்த பிறகு, ஹெலிகாப்டர் மூலம் திருவண்ணாமலை நோக்கி பயணம் மேற்கொள்கிறார். டிசம்பர் 28-ஆம் தேதி, திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிய பாஜக அலுவலகத்தை திறந்து வைத்து, அதன் பின்னர் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவார். 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கட்சியின் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்துவது அவசியமாகும் எனக் கூறப்படுகிறது. அதன் பிறகு, அவர் திருவண்ணாமலை கோயிலில் சாமி தரிசனம் செய்வார். அந்த நாளில், திருவண்ணாமலையில் இருந்து நேரடியாக தில்லிக்கு செல்லவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

