இந்தியாவின் முன்னணி விமான சேவை நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ விமான நிறுவனம் தனது தலைமைச் செயல் அதிகாரி (CEO) பீட்டர் எல்பர்ஸ் தனிப்பட்ட காரணங்களால் பதவியில் இருந்து விலகியுள்ளதாக அறிவித்துள்ளது. சமீப காலமாக இண்டிகோ விமானங்கள் பல இடங்களில் ரத்து செய்யப்பட்ட சம்பவங்கள் நடந்ததால் பயணிகள் சிரமம் அனுபவித்ததாக தகவல்கள் வெளியாகின. இந்த சூழ்நிலையும் அவரது ராஜினாமாவுக்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. பீட்டர் எல்பர்ஸ் கடந்த சில ஆண்டுகளாக நிறுவனத்தின் வளர்ச்சிக்காக பல திட்டங்களை மேற்கொண்டிருந்தார்.அவரது ராஜினாமைக்கு பிறகு, இண்டிகோ நிறுவனத்தின் இணை நிறுவனர் ராகுல் பாட்டியா தற்காலிகமாக புதிய CEOவாக பொறுப்பேற்றுள்ளார். விமான சேவைகளை சீரமைத்து பயணிகளுக்கு சிறந்த சேவை வழங்குவது அவரது முக்கிய முன்னுரிமையாக இருக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் உள்நாட்டு விமானப் போக்குவரத்தில் இண்டிகோ முக்கிய பங்கு வகித்து வருகிறது. அதனால், விமான ரத்துகள் போன்ற பிரச்சினைகளை சரிசெய்து சேவையை மேம்படுத்த நிறுவனம் புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

