ஆந்திர எல்லையில் செம்மரம் கடத்தியதாக 19 தமிழர்கள் கைது; ஆந்திர போலீஸ் அதிரடி

அரசியல் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி

ஆந்திராவில் 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள செம்மரங்களை கடத்தியதாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த 19 பேர் உட்பட 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலம் திருப்பதி அருகேயுள்ள சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரக் கட்டைகள் விளைகின்றன. செம்மரங்களை வெட்டிக் கடத்தும் சம்பவங்கள் கடந்த 30 ஆண்டுகளாக தொடரும் நிலையில் அது தொடர்பான கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டைச் சேர்ந்த பலர் கடத்தல் தொடர்பாகக் கைது செய்யப்படுவதும் வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில், 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள செம்மரங்களை கடத்தியதாக தமிழ்நாட்டைச் சேர்ந்த சிலர் தற்போது மீண்டும் சிக்கியுள்ளனர்.
ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே ஷேசாசலம் வனப்பகுதியில் உள்ள சாக்கலமர்ரி பகுதியில், செம்மரங்கள் வெட்டிக் கடத்தப்படுவதாக செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அங்கே சென்று சோதனையிட்ட போலீஸார், தமிழ்நாட்டைச் சேர்ந்த 19 பேர் உட்பட 22 பேரை கைது செய்தனர். செம்மரம் கடத்த பயன்படுத்தப்பட்ட லாரியை பறிமுதல் செய்த அவர்கள், 11 செம்மரக் கட்டைகளையும் கைப்பற்றினர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *