மீண்டு வரும் ஓசோன் படலம் :உலக வானிலை அமைப்பு அறிவிப்பு.

அறிவியல் மற்றும் அறிவியல் கண்டுபிடிப்புகள் ஆரோக்கியம் இயற்க்கை உலகம் சிறப்பு சுற்றுச் சூழல் செய்திகள்

பூமியின் உயிர்களுக்கு மிகப் பெரிய பாதுகாப்பாக இருப்பது ஓசோன் படலம். அதில் பெரும் ஆபத்தாகக் கருதப்படும் ஓசோன் துளை இப்போது மீண்டு வருவதாக உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில், 1980களில் இருந்த நிலைக்கு ஓசோன் படலம் திரும்பும் என கூறப்பட்டுள்ளது. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்புகள், மனிதர்களுக்கு ஏற்படும் தோல் புற்றுநோய், கண்புரை உள்ளிட்ட அபாயங்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சூரியனின் UV கதிர்வீச்சுக்கு எதிராக பூமியின் பாதுகாப்பு கவசமாக விளங்கும் ஓசோன் படலத்தில் உள்ள துளை படிப்படியாக குறைந்து வருவதாகவும், இது சுற்றுச்சூழல் பாதுகாப்பு முயற்சிகளின் வெற்றியை பிரதிபலிப்பதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *