சி.என்.என் – நியூஸ்18 தொலைக்காட்சி “இந்தியன் ஆஃப் த இயர்” விருது விழாவில் சமூக மாற்றத்துக்கான பிரிவில் சென்னையைச் சேர்ந்த மருத்துவர் ரவி கண்ணனுக்கு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது. இந்திய செய்தித் தொலைக்காட்சிகளில் தனக்கென தனித்த இடம் பிடித்துள்ள சி.என்.என் – நியூஸ்18 தொலைக்காட்சி, கடந்த 2006ஆம் ஆண்டு முதல் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோரை பெருமைப்படுத்தி, விருதளித்து கவுரவித்து வருகிறது.
அந்த வகையில் 13ஆவது “இந்தியன் ஆஃப் த இயர்” விருது வழங்கும் விழா டெல்லியில் இன்று மாலை 6 மணிக்கு கோலாகலமாக தொடங்கியது. ஆரம்பமே அதிரடியாகவும் பார்வையாளர்களின் மனங்கவரும் வகையிலும் இசை நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழாவில் நடிகர்கள் ஷாரூக்கான் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்த விருது வழங்கும் விழாவில் சி.என்.என் – நியூஸ்18 தொலைக்காட்சியின் “இந்தியன் ஆஃப் த இயர் சிறந்த பொழுதுபோக்கு நட்சத்திரதிற்கான’’ விருதை தமிழகத்தை சேர்ந்த பிரபல முன்னணி இயக்குனர் மணிரத்தினம் பெற்றார்.
அதேபோல் “இந்தியன் ஆஃப் த இயர் யூத் ஐகான் விருதை முன்னணி இசையமைப்பாளர் அனிருத் பெற்றார். இந்த விருதை அனிருத்திற்கு இயக்குனர் மணிரத்தினம் வழங்கினார்.

