இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் யூபிஐ பரிவர்த்தனைகள் புதிய உச்சத்தை தொட்டுள்ளன!கடந்த அக்டோபர் மாதத்தில், யூபிஐ மூலம் மொத்தம் ரூ. 27 லட்சத்து 28 கோடி மதிப்பிலான பணப்பரிமாற்றங்கள் நடைபெற்றுள்ளன — இது நாட்டில் இதுவரை நடந்த மிகப்பெரிய பரிவர்த்தனை அளவாகும்.தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் (NPCI) வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த மாதம் யூபிஐ வழியாக ரூ. 2,070 கோடி பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன. இது செப்டம்பர் மாதத்தை விட 3.6% அதிகமாகும்.ஜிஎஸ்டி திருத்தங்கள் மற்றும் பண்டிகை காலத்தின் தாக்கத்தால், யூபிஐ பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தினசரி சராசரியாக ரூ. 66.8 கோடி பரிவர்த்தனைகள் யூபிஐ மூலம் நடைபெற்றுள்ளதாகவும் NPCI தெரிவித்துள்ளது.

