பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானை பிரிவதாக அவரது மனைவி பரபரப்பு அறிக்கை; 29 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது

இசை இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் நீதி மன்றம் மற்றவை முதன்மை செய்தி

இசைப்புயல் ஏ.ஆர். ரகுமானை பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இருவருக்கும் இடையே நிரப்ப முடியாத இடைவெளி ஏற்பட்டுள்ளதால் இந்த முடிவை எடுத்திருப்பதாக சாய்ரா பானு தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
ஏ.ஆர். ரகுமான் – சாய்ரா பானு இடையே 1995 ஜனவரி 6 ஆம் தேதியன்று திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவருக்கும் கதிஜா மற்றும் ரஹீமா என 2 மகன்களும், அமீன் என்ற மகனும் உள்ளனர்.
இருவரும் ஏராளமான நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்து கொண்டு சிறந்த ஜோடிகள் என்ற பாராட்டை பெற்றிருந்தனர். இந்த நிலையில் யாரும் எதிர்பாராத திருப்பமாக கணவர் ஏ.ஆர்.ரகுமானை பிரிவதாக சாய்ரா பானு தனது வழக்கறிஞர் மூலமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த நிகழ்வு ஏ.ஆர்.ரகுமான் ரசிகர்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
சாய்ரா பானு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது-
திருமணமாகி பல ஆண்டுகளுக்கு பின்னர் சாய்ரா பானு தனது கணவர் ஏ.ஆர். ரகுமானை பிரிவது என்ற கடினமான முடிவை எடுத்துள்ளார். ஒருவருக்கொருவர் அதிக அன்பு செலுத்திய நிலையில், அழுத்தங்களும், சிரமங்களும் நிரப்ப முடியாத அளவு இடைவெளியை இருவரிடையே ஏற்படுத்தியுள்ளது.
இந்த இடைவெளியை யாராலும் தீர்க்க முடியாது என்று சாய்ரா பானு தெரிவித்துள்ளார். வேதனையான தருணத்தில் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். இந்த சூழலில் அவருடைய தனியுரிமைக்கு மதிப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *