5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தலைமை தேர்தல் ஆணையர்; தேர்தல் நடக்கும் தெலங்கானா, மிசோரம், சத்தீஸ்கர், ம.பி. ராஜஸ்தான் மாநிலங்களில் தேர்தல் விதிகள் அமலுக்கு வந்தது. சட்டமன்ற தேர்தல் நடக்கும் 5மாநிலங்களில் மொத்தம் 1.77லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும்.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 200 சட்டப்பேரவை தொகுதிகளில் நவ.23ம் தேதி வாக்குப்பதிவு. ராஜஸ்தான் மாநிலத்தில் 5.25 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். ராஜஸ்தானில் 200 சட்டப்பேரவை தொகுதிகளில் 51,756 வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடக்கும்.
தெலங்கானா மாநிலத்தில் உள்ள 119 சட்டப்பேரவை தொகுதிகளில் நவ.30ம் தேதி வாக்குப்பதிவு. தெலங்கானா மாநிலத்தில் 3.17கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். தெலங்கானாவில் 119 சட்டப்பேரவை தொகுதிகளில் 35,356 வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடக்கும்.
மிசோரம் மாநிலத்தில் உள்ள 40 சட்டப்பேரவை தொகுதிகளில் நவ.7ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
மிசோரம் மாநிலத்தில் 8.52 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். மிசோரம் மாநிலத்தில் 40சட்டப்பேரவை தொகுதிகளில் 1,276 வாக்குச்சாவடிகள் அமைத்து வாக்குப்பதிவு நடக்கும்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் நவ.7 மற்றும் 17 ஆகிய நாட்களில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. சத்தீஸ்கரில் உள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளில் 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 20 தொகுதிகளுக்கு நவ.7ம் தேதியும், மீதமுள்ள 70 தொகுதிகளுக்கு நவ.17ம் தேதியும் வாக்குப்பதிவு. சத்தீஸ்கர் மாநிலத்தில் 2.03 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். சத்தீஸ்கரில் 90 சட்டப்பேரவை தொகுதிகளில் 24,109 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடக்கும்.
மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள 230 சட்டப்பேரவை தொகுதிகளில் நவ.17ம் தேதி வாக்குப்பதிவு.
மத்தியப்பிரதேச மாநிலத்தில் 5.06 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். மத்தியப்பிரதேசத்தில் 230 சட்டப்பேரவை தொகுதிகளில் 64,523 வாக்குச்சாவடி அமைத்து வாக்குப்பதிவு நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
