மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 6வது முறையாக கோப்பையை வென்று ஆஸ்திரேலியா அணி சாதனை

ஆப்ரிக்க நாடுகள் ஆஸ்திரேலியா உலகம் கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் விளையாட்டு

மகளிர் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 19 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி 6வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
8வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, இந்தியா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியது.
முதல் அரையிறுதி போட்டியில் இந்திய அணியை ஆஸ்திரேலிய அணி 5 ரன்கள் வித்தியசத்தில் வீழ்த்தி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதையடுத்து நடைபெற்ற 2வது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை 6 ரன்கள் வித்தியசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்க அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
இறுதிப்போட்டியில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 156 ரன்களை எடுத்தது.
இதையடுத்து 157 ரன்களை எடுத்தால் உலகக் கோப்பையை வெல்லலாம் என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இதையடுத்து ஆஸ்திரேலிய அணி 6வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.

Leave a Reply

Your email address will not be published.