நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கம் ஏற்பட சின்ன சின்ன பொருட்கள் கூட காரணிகளாக உள்ளது, இதற்கு முக்கியமான காரணம் அனைத்து பொருட்களின் விற்பனையும் மக்களின் வருமானத்தின் அடிப்படையில் உள்ளது. இந்த வர்த்தகத்தின் அடிப்படையில் தான் ஒரு நாட்டின் பொருளாதாரம் அமையும். அந்த வகையில் அமெரிக்க மத்திய வங்கியின் முன்னாள் தலைவரான ஆலன் கிரீன்ஸ்பான் ஆண்களின் உள்ளாடை அதிலும் குறிப்பாக ஜட்டி விற்பனை பொருளாதார வளர்ச்சியின் முக்கிய அளவுகோல் எனக் கூறுகிறார்.
இந்த நிலையில் இந்தியாவில் ஆண்கள் பிரிவு உள்ளாடைகள் நிறுவனங்கள் நிஃப்டி சந்தையில் மிகவும் மோசமாகச் செயல்படுகிறது, இதனால் இதை இந்திய பொருளாதாரம் குறித்த அச்சமாகவும் பார்க்கப்படுகிறது.
நிஃப்டி 50-யில் கடந்த ஒரு வருடத்தில் உள்ளாடை நிறுவனங்கள் மோசமாகச் செயல்பட்டு வருகிறது. இந்த நிலை தொடர்ந்தால் பொருளாதாரத்தில் ஏதோ சரியாக இல்லை என்பதற்கான சிக்னலாகப் பார்க்கப்படுகிறது. உள்ளாடை அனைத்து ஆண்களுக்கும் மிகவும் முக்கியமான ஒன்று, இதை கட்டாயம் மக்கள் வாங்க வேண்டும்.
ஆனால், இந்தியாவில் உள்ளாடை விற்பனை அல்லது பயன்பாடு 55 சதவீதமாகச் சரிந்துள்ளது.