தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் ஜூன் 24ம் தேதி தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டதால் கடந்த 3 மாதங்களாக அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. இந்த சூழலில் ஜூன் 24ஆம் தேதி மானிய கோரிக்கை தொடருக்கான சட்டப்பேரவை கூட்டம் தொடங்கப்படவுள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
பேரவை கூட்டத்தில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் தொடங்கும் எனவும், எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்திற்கு பிறகு அறிவிக்கப்படும் எனவும் சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.
ஜூன் 24ஆம் தேதி தொடங்கும் சட்டப்பேரவை கூட்டத்தொடர் சுமார் 25 நாட்களுக்கு மேல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக கடந்த பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 22ஆம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்றது.
