2024 இந்திய பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கான தேதி நாளை 16ஆம் தேதி அறிக்கப்படும்; இந்திய தேர்தல் ஆணையம் தகவல்

அரசியல் இந்தியா செய்திகள் தமிழ்நாடு தேர்தல் செய்திகள் 2024 நிகழ்வுகள் மருத்துவம் முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள்

மக்களவைத் தேர்தலுக்கான தேதி நாளை பிற்பகல் 3 மணிக்கு தேர்தல் ஆணையம் அறிவிக்கவுள்ளது.
இந்திய தலைமை தேர்தல் ஆணையராக கியானேஸ் குமார், சுக்பிர் சிங் சாந்து ஆகியோர் இன்று பதிவியேற்றுக் கொண்டனர்.
தொடர்ந்து, தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாருடன் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 2 ஆணையர்களும் ஆலோசனையை மேற்கொண்டர். இதில் மக்களவை தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, நாளை (16.03.2024) பிற்பகல் 3 மணிக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவைத் தேர்தலுடன் அருணாச்சல பிரதேசம், ஆந்திரா, ஒடிசா, சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கும் நாளை தேர்தல் அறிவிக்கப்படவாய்ப்புள்ளதாக தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *