அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் கமலா ஹாரிசுக்கு தொழிலதிபர் பில்கேட்ஸ் தனது ஆதரவை வழங்கியுள்ளார். அவர் கமலாவுக்கு 50 மில்லியன் டாலர் நன்கொடை வழங்கியுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5 அன்று நடைபெறவுள்ளது. ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிசும், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்பும் போட்டியிடுகின்றனர். தேர்தலுக்கு இரண்டு வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில், கமலா ஹாரிசும், டிரம்பும் தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் கமலா ஹாரிசுக்கு தொழிலதிபர் பில்கேட்ஸ் தனது ஆதரவை வழங்கியுள்ளார். அவர் கமலாவுக்கு 50 மில்லியன் டாலர் அளவிலான நன்கொடை வழங்கியுள்ளார்.பில் கேட்ஸ், ஹாரிஸை ஆதரிக்கும் முதன்மை நிதி திரட்டும் குழுவான ஃபியூச்சர் ஃபார்வர்டுக்கு நன்கொடை வழங்கினார் என்றும், ஹாரிஸுக்கு ஜனாதிபதியாக ஆதரவு அளிக்கும் 80க்கும் மேற்பட்ட கோடீஸ்வரர்களின் பட்டியலில் கேட்ஸ் இணைந்துள்ளதாக ஃபோர்ப்ஸ் செய்தி வெளியிட்டது, அதே சமயம் முந்தைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆதரிக்கும் கோடீஸ்வரர்கள் 50 பேராக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

