சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் தமிழக அரசின் தலைமைச் செயலகம் செயல்பட்டு வருகிறது. தலைமைச் செயலக கட்டிடத்தில் திடீரென ஏற்பட்ட அதிர்வால், ஊழியர்கள் அச்சத்துடன் வெளியே சென்றனர். தலைமைச் செயலகத்தின் ஒரு பகுதியாக அமைந்துள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் பல்வேறு துறைகளின் அலுவலகங்கள் உள்ளன. அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டுவருகின்றன. இந்நிலையில், இன்று காலை தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் திடீரென ஒரு அதிர்வை உணர்ந்தனர், இதற்கிடையில் முதல் தளத்தில் உள்ள தரையில் உள்ள டைல்ஸில் சத்தத்துடன் விரிசல் ஏற்பட்டது. அச்சத்தில் ஊழியர்கள், நாமக்கல் கவிஞர் மாளிகையை விட்டு வெளியேறினர், இதனால்அங்கு பரபரப்பு நிலவியது.இதற்கிடையில், இது ஒரு சாதாரண விரிசல் மட்டுமே எனவும், ஊழியர்கள் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை எனவும் போலீசார்கள் விளக்கம் அளித்தனர். சேதமடைந்த பகுதிகளை அதிகாரிகள் மற்றும் அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு செய்தனர்.அப்போது, அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது: 14 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட டைல்ஸ்கள். அந்த காலத்தில், டைல்ஸ்கள் சிறிய வடிவங்களில் மட்டுமே தயாரிக்கப்படுவதாக இருந்தது. இது ஒரு சாதாரண ஏர் கிராக் ஆல் ஏற்ப்பட்டது ஆகும். கட்டிடத்தில் விரிசல் எதுவும் இல்லை. பொறியாளர்களுடன் ஆய்வு செய்தபோது, கட்டிடம் உறுதியாக உள்ளது என கண்டறிந்தேன். இருப்பினும், ஏர் கிராக் உள்ள பகுதிகளில் பழைய டைல்ஸ்களை அகற்றி, புதிய டைல்ஸ்களை அமைக்க உத்திரவு அளித்துள்ளேன். எனவே, அச்சப்பட வேண்டாம் என அவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.