வயநாடு மக்களவைத் தொகுதி காலியாக உள்ள நிலையில் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது, இந்நிலையில் பிரியங்கா காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிடுவதால் இன்று அக்டோபர் 23 தேதி, வேட்புமனு தாக்கல் செய்ய பிரியங்கா காந்தி கேரளா வந்துள்ளார். அவர் தாய் சோனியா காந்தியுடன் கேரளா சென்றுள்ளார் . அவர்கள் விமானம் மூலம் மைசூரு வந்த பிறகு, அங்கு இருந்து சாலை மார்க்கம் மூலம் கேரளா சென்றடைந்தனர். 2024 மக்களவைத் தேர்தலில் எதிர் கட்சி தலைவர் ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு மற்றும் உத்தர பிரதேசத்தின் ரேபரேலி என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். இரண்டு தொகுதியிலும் வெற்றி பெற்றார். இருப்பினும் ஒரு தொகுதியை ராஜினாமா வேண்டியதால் அவர், மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், ஜூன் 17 தேதி அன்று வயநாடு தொகுதியின் எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இதன் பின்னர், அந்த தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டது. இந்திய தலைமை தேர்தல் ஆணையம், வயநாடு தொகுதிக்கு நவம்பர் 13-ல் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவித்தது. காங்கிரஸ் கட்சியினர் பொது மக்கள் எதிர்பார்த்தது போலவே, பிரியங்காவை வேட்பாளராக அறிவித்தது காங்கிரஸ். பாஜக சார்பில் நவ்யா ஹாரிதாஸ் மற்றும் இடதுசாரி ஜனநாயக முன்னணி சார்பில் சத்யன் மொக்கேரி ஆகியோர் போட்டியில் களம் காண உள்ளனர் . மேலும் இன்று, பிரியங்கா காந்தி, சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உடன் சேர்ந்து வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். வயநாடு இடைத்தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் பிரியங்கா காந்தி நேரடி தேர்தல் அரசியலில் காலடி எடுத்து வைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.