மஹராஷ்டிரா, ஆந்திரா தெலுங்கானாவில் பரவும் பறவை காய்ச்சல்; அண்டை மாநிலத்திலிருந்து கோழி, முட்டை வாங்கத் தடை, கர்நாடகா அரசு முடிவு

இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் மருத்துவம் மருத்துவம் மற்றவை முதன்மை செய்தி

மராட்டிய மாநிலத்தில் பறவை காய்ச்சலால் வனவிலங்குகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம் ஆகிய மாநிலங்களில் சிறு தினங்களாக பறவை காய்ச்சல் அதிகரித்து வருகிறது. இந்த நோய் அடுத்தடுத்த மாநிலங்களிலும் பரவி வருகிறது. இது தொடர்ந்து பரவாமல் தடுக்க கர்நாடக சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், பறவை காய்ச்சல் எதிரொலியாக ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம் ஆகிய மாநிலங்களில் இருந்து கோழிகள் மற்றும் முட்டைகளை வாங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பறவை காய்ச்சல் மேலும் பரவுவதை தடுக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பறவைக் காய்ச்சல் எதிரொலியாக வெளிமாநிலங்களில் இருந்து கோழிகள், முட்டை வாங்க கர்நாடக அரசு தடைவிதித்துள்ளது. ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம் மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவி வரும் நிலையில் கர்நாடக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *