மக்களவை கடைசிக் கட்டத் தேர்தல் நாளை மறுநாள் (ஜூன் 1) நடைபெற உள்ள நிலையில், இன்று மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது.
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை 6 கட்டத் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் 7வது மற்றும் கடைசி கட்டத் தேர்தல் ஜுன் 1-ம் தேதி நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் மற்றொரு தொகுதியான வாரணாசி தொகுதியிலும் ஜுன் 1-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இதில் கடைசிக் கட்டத் தேர்தல் நாளை மறுநாள் (ஜூன் 1) நடைபெற உள்ள நிலையில், இன்று (மே 30) மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது. மக்களவை தேர்தல் 2024-க்கான இறுதி பிரச்சாரம் இதுவே. தேர்தல் விதிகளின்படி, தேர்தல் பிரசாரம் ஓய்ந்த பின், தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் இருக்கும் வெளியூர், வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இன்று 5 மணிக்கு மேல் இருக்கக்கூடாது.
பிரதமர் மோடி போட்டியிடும் உத்திர பிரதேசம் வாரணாசி தொகுதி உட்பட உ.பி, பீகார், ஒடிசா, சண்டிகர், இமாச்சல பிரதேசம், பஞ்சாப், மேற்கு வங்கம், ஜார்கண்ட் என 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 57 மக்களவைத் தொகுதிகளுக்கு ஜூன் 1-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த 57 மக்களவைத் தொகுதிகளில் மொத்தம் 904 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

