உலக மக்கள் தொகை இந்தாண்டு கணக்குப் படி 8 பில்லியன், அதாவது 800 கோடி. ஒட்டுமொத்த உலக நாடுகளில் இந்த இரண்டு நாடுகளை மட்டும் சேர்த்தாலே 300 கோடியை நெருங்கும். எந்தெந்த நாடுகள்.? சீனாவும், இந்தியாவும் தான் அந்த நாடுகள். உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடு சீனா, இரண்டாவது இடத்தில் இந்தியா. 2025க்குள் இந்தியா சீனாவை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடிக்கும் எனக் கணிக்கப்படுகிறது.
சீனாவின் மக்கள் தொகை கட்டுக்கடங்காமல் போகவே திருமணமான தம்பதியினர் ஒருக் குழந்தை மட்டுமே பெற்றுக் கொள்ளா வேண்டும் என்று சீன அரசு சட்டம் நிறைவேற்றியது. இதனை மிகக் கடுமையாக கடைப்பிடித்தது. இதனால் சீனக்குடும்பத்தில் ஒரு குழந்தை மட்டுமே கடந்த இரண்டு தலைமுறைகளுக்கு மேலாக. ஒருக்கட்டத்தில் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க, இளையத் தலைமுறை பிறப்பு விகிதம் குறைய ஆரம்பித்தது. அத்தோடு, வேலைக்கும் ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டது சீனாவில்.
இதனால் ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றுக்கொண்டால் வரிச் சலுகை, வேலை வாய்ப்பில் சலுகை, கடனுதவி என அனைத்தும் வழங்கப்படும் என சீன அரசு அறிவித்துள்ளது. ஒரு குடும்பம், ஒரு குழந்தை என்ற சட்டத்தைம் ரத்து செய்துள்ளது.
இதே போல ரஷ்ய நாட்டிலும் பிறப்பு விகிதம் பெரிதும் குறைந்து வருவதால் அந்நாடு கவலை தெரிவித்துள்ளது. கொரோனா காலக் கட்டத்திற்கு பிறகு பிறப்பு விகிதம் இன்னும் சரிவை எதிர்கொண்டதால் அந்நாடு புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. பெண்கள் பத்துக் குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொண்டால் 13,500 ரஷ்யபவுண்டுகள் வழங்கப்படும். அதாவது இந்திய ரூபாயின் மதிப்பில் 13லட்சம் ஒவ்வொரு பெண்களுக்கும்.