கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப்பை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு புளொரிடாவில் உள்ள, டொனால்ட் டிரம்ப்பின் மாறலாகோ இல்லத்தில் நடைபெற்றுள்ளது. இந்த சந்திப்பில் கனடிய பொது பாதுகாப்பு அமைச்சர் டொமினிக் லேபிளாங்க் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. டிரம்ப் ஆட்சியின் உள்துறை செயலாளர் மற்றும் வர்த்தக செயலாளர் போன்ற முக்கிய பதவிகளுக்கு நியமிக்கப்பட உள்ளவர்கள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில், கனடா மற்றும் மெக்ஸிகோவுக்கு எதிரான ஏற்றுமதி வரிகளைக் குறித்து டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பின் பின்னணி, கனடிய பிரதமருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முக்கியமாக இடம்பெற்றுள்ளது . இந்த பேச்சுவார்த்தை தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்களை இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.