தமிழகத்தில் அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்க, முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.

அரசியல் இயற்க்கை சிறப்பு செய்திகள் தமிழ்நாடு முதன்மை செய்தி வானிலை

முதல்வர் மு.க.ஸ்டாலின், புயல் மற்றும் கனமழையின் காரணமாக அம்மா உணவகங்களில் இன்று உணவு இலவசமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார். வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘ஃபென்ஜால்’ என்ற பெயரில் வெள்ளிக்கிழமை புயலாக மாறியுள்ளது. இந்த புயல், சனிக்கிழமை (நவ. 30) இரவு அல்லது ஞாயிற்றுக்கிழமை காலை (டிச. 1) புதுச்சேரி அருகே கரையைக் கடக்க வாய்ப்பு உள்ளது. இதன் விளைவாக, சென்னை புறநகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் பலத்த மழை பெய்ந்து வருகிறது. சென்னையில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களில் இன்று நவம்பர் 30ம் தேதி அன்று மட்டும் மக்களுக்கு இலவச உணவு வழங்குவதற்கான உத்திரவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். ஃபென்ஜால் புயல் மழை ஏற்படுத்திய பாதிப்புகளை கருத்தில் கொண்டு, முதல்வர் ஸ்டாலின் சென்னை எழிலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அங்கு, மழை தொடர்பான முன்னேற்பாடுகள் மற்றும் பாதிப்புகள் குறித்து அதிகாரிகளிடம் தகவல்களைப் பெற்ற அவர், தேவையான உதவிகளை வழங்குவதற்கான உத்திகளை வழங்கினார். மேலும், எழிலகம் கட்டுப்பாட்டு அறையில், மழை பாதித்த மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *