டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடிப்பு – 10 பேர் உயிரிழப்பு. டெல்லி செங்கோட்டை அருகே உள்ள மெட்ரோ நிலையம் கேட்-1 அருகே இன்று மாலை 6.30 மணிக்கு கார் வெடித்தது. வெடிப்பால் அருகிலிருந்த மேலும் 4 கார்கள் தீப்பற்றி எரிந்தன.தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர், 24 பேர் காயமடைந்துள்ளனர் என கூறப்படுகிறது.போலீசார், தடயவியல் நிபுணர்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு குழுவினர் (NSG, NIA) விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவத்தால் டெல்லி முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. விமான நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் கடும் சோதனை நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் அமைச்சர்கள் ஆலோசனை நடத்திவருகின்றனர் . தமிழகம் மற்றும் நாடு முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

