நடிகர் சங்க புதிய கட்டிட பணிகளைத் தொடர்வதற்காக நடிகர் தனுஷ் நிதியுதவி அளித்துள்ளதாக நடிகர் சங்க தலைவர் நாசர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர் தனுஷ், நடிகர் சங்க புதிய கட்டிட பணிகளைத் தொடர்வதற்காக சங்கத்தின் வங்கி வைப்புநிதிக்காக ரூ.1,00,00,000/- (ரூபாய் ஒரு கோடி) நிதியுதவியை தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர் பூச்சி S.முருகன் ஆகியோரிடம் வழங்கினார். அவருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறது என அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.
