தொழிலாளர்கள் வைப்புத் தொகையின் வட்டி விகிதத்தை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது மத்திய அரசு

அரசியல் கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் பொருளாதாரம் மற்றவை முதன்மை செய்தி

தொழிலாளர்களுக்கான பி.எஃப் வட்டி விகிததத்தை 8.15 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும உள்ள கோடிக்கணக்கான தொழிலாளர்கள் பயனடைய உள்ளனர்.
இது தொடர்பாக மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சக அனைத்து துறை அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாகவது- தொழிலாளர்களுக்கான பி.எஃப். (வருங்கால வைப்பு நிதி வைப்புத்தொகை) வட்டி விகிதம் 8.15 சதவீதமாக 2022 – 23 ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு உயர்த்தியுள்ளது என்பதை மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் தெரிவித்துக்கொள்கிறது. எனவே இதன் அடிப்படையில் தொழிலாளர்களுக்கு அவர்களுக்கான பி.எஃப். வட்டி விகிதத்தை உயர்த்தி வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பி.எஃப் தொகைக்கான வட்டி விகிதம் 8.10 சதவீதமாக தற்போது நடைமுறையில் இருந்து வருகிறது.
இந்நிலையில் 8.15 சதவீதமாக உயர்த்தப்பட்டு மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *