ரூ.2,104 கோடி மதிப்பில் சந்திரயான்-4 திட்டத்தை செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த ஆண்டு சந்திரயான் 3 விண்கலம் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரை இறங்கியது. அதன் தொடர்ச்சியாக தற்போது சந்திரயான்-4 விண்கலத்தை நிலவுக்கு இந்தியா அனுப்ப உள்ளது. சந்திரயான்-4 திட்டத்தை பொறுத்தவரை இந்தியாவின் சார்பில் அனுப்பப்படும் விண்கலமானது அங்கே தரை இறங்கிவிட்டு மீண்டும் பூமிக்கு திரும்பும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கி அங்கிருந்து மாதிரிகளை சேகரித்து பூமியில் ஆராய்ச்சி செய்யும் வகையில் சந்திரயான்-4 திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 2040க்குள் நிலவுக்கு சந்திரயான்-4 விண்கலத்தை தரையிறக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ககன்யான் திட்டம் என்பது நிலவுக்கு மனிதர்களை அனுப்புவதற்கான திட்டமாகும். இந்த திட்டத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், பணிகளை மேற்கொள்வதற்கும் ஒன்றிய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது. விண்வெளியில் ஆய்வு மையம் ரூ.20,193 கோடியில் விண்வெளியில் ஆய்வு மையம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
2035க்குள் இந்தியாவிற்கென்று பிரத்யேக விண்வெளி நிலையம் அமைக்கப்பட உள்ளது அதற்கு (பாரதிய அந்தரிக்ஷ் நிலையம்) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த விண்வெளி மையத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்குவதற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் குழுவின் அறிக்கையை ஏற்று, நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தில் இத்திட்டம் தொடர்பாக மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளது.