சந்திரயான்-4: இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சிக்கு மத்திய அமை்சரவை ஒப்புதல்

அரசியல் அறிவியல் மற்றும் அறிவியல் கண்டுபிடிப்புகள் இந்தியா சுய பிரகடனம் செய்திகள் விண்வெளி சார்ந்தவை

சந்திரயான்-4 பயணத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. நிலவில் வெற்றிகரமாக இறங்கிய பிறகு பூமிக்கு திரும்புவதற்கான தொழில்நுட்பங்களை உருவாக்கவும், நிலவின் மாதிரிகளை சேகரித்து பூமியில் பகுப்பாய்வு செய்யவும் சந்திரயான்-4 பயணத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த சந்திரயான்-4 விண்கலம் நிலத்தில் தரையிறங்கி, பாதுகாப்பாக பூமிக்கு திரும்பும். இதை 2040-ம் ஆண்டுக்குள் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 2035-ம் ஆண்டுக்குள் இந்திய விண்வெளி நிலையம் (பாரதிய அந்தரிக்‌ஷ் நிலையம்) மற்றும் 2040-க்குள் சந்திரனில் இந்தியா அமிர்த கால இந்திய விண்வெளித் திட்டம் ஆகியவற்றுக்கான விரிவான தொலைநோக்குப் பார்வையை மத்திய அரசு வகுத்துள்ளது. இந்த தொலைநோக்கு பார்வையை நனவாக்க, விண்வெளிப் பயண உள்கட்டமைப்பு திறன்களை மேம்படுத்துவது உட்பட தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இஸ்ரோ, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில், விண்கலத்தை உருவாக்கி செலத்தும் பணியை திறம்பட நிர்வகிக்கிறது. சந்திரயான்-4 விண்கலத்தை விண்ணில் செலுத்த ரூ.2,104.06 கோடி நிதி தேவைப்படுகிறது.இந்த செலவில், விண்கல மேம்பாடு, எல்விஎம் 3-ன் இரண்டு ஏவு வாகன பயணங்கள், வெளிப்புற ஆழமான விண்வெளி நெட்வொர்க் ஆதரவு, வடிவமைப்பு சரிபார்ப்புக்கான சிறப்பு சோதனைகள், சந்திர மேற்பரப்பில் தரையிறங்குதல் மற்றும் சேகரிக்கப்பட்ட சந்திர மாதிரியுடன் பூமிக்கு பாதுகாப்பாக திரும்புதல் ஆகியவை அடங்கும். மனிதர்களை அனுப்புவதற்கான அடிப்படை தொழில்நுட்பங்கள், சந்திர மண்டல மாதிரிகளை பெறுதல் மற்றும் சந்திர மாதிரிகளின் அறிவியல் பகுப்பாய்வு ஆகியவற்றில் இந்தியா புதிய உச்சம் பெற இந்த திட்டம் உதவும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.ககன்யான் திட்டத்தின் நோக்கத்தை விரிவுபடுத்துவதற்காக, பாரதிய விண்வெளி நிலையத்தின் முதல் பிரிவை உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பாரதிய விண்வெளி நிலையத்தின் (பிஏஎஸ்-1) முதல் தொகுதியை மேம்படுத்த, கட்டமைக்க மற்றும் இயக்குவதற்கான பல்வேறு தொழில்நுட்பங்களை செயல்விளக்கம் செய்து சரிபார்க்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *