ஆகஸ்ட் 31ல் சென்னையில் ஃபார்முலா 4 கார் ரேஸ்; பொதுமக்கள் இலவசமாக கண்டுகளிக்க ஏற்பாடு

இந்தியா செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள் விளையாட்டு

சென்னையில் நடைபெற உள்ள ஃபார்முலா 4 கார் பந்தயத்தால், போக்குவரத்து நெரிசல் ஏற்படாது என்று விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நடத்த திட்டமிட்டு, பின்னர் ஒத்திவைக்கப்பட்ட ஃபார்முலா 4 கார் பந்தயம், வருகிற 31 மற்றும் செப்டம்பர் ஒன்றாம் தேதிகளில் சென்னை தீவுத்திடல் மைதானத்தை சுற்றியிருக்கும் 3.5 கி.மீ. சுற்றளவு சாலைகளில் நடைபெற உள்ளது.
இந்த போட்டியை பார்வையாளர்கள் கண்டுரசிக்க 1999 ரூபாய் முதல் 19,999 ரூபாய் வரை கட்டணமாக நிர்ணயித்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், ஃபார்முலா 4 கார் பந்தயத்திற்கான முன்னேற்பாடுகள் தொடர்பாக தலைமைச் செயலாளர் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளுடன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது, ஃபார்முலா 4 கார் பந்தயத்துக்கான முன்னேற்பாடுகள், பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்டவை குறித்து விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
8000 பேர் இந்த போட்டியை காணும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் வரும் 31-ஆம் தேதி காலையில் நடைபெறும் போட்டியை பொதுமக்கள் இலவசமாக கண்டுகளிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *