தமிழக அரசு சார்பாக புரட்டாசி மாத வைணவத் திருதளங்களுக்கு ஆன்மீகச் சுற்றுலா

ஆன்மீக தளங்கள் ஆன்மீகம் கடந்த நிகழ்ச்சிகள் கோயில்கள் சுற்றுலா செய்திகள் தமிழ்நாடு

புரட்டாசி மாத வைணவத் திருக்கோயில் ஆன்மிகச் சுற்றுலாவினை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தொடங்கி வைத்தார்
சென்னை: தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புரட்டாசி மாத வைணவத் திருக்கோயில் ஆன்மிகச் சுற்றுலா திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறையுடன் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்துள்ள புரட்டாசி மாத வைணவத் திருக்கோயில் ஆன்மிகச் சுற்றுலாவினை இன்று (24ம் தேதி ) இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சுற்றுலாத்துறை அமைச்சர் மா. மதிவேந்தன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இப்பயணத்தின் முதல் திட்டத்தில் திருவல்லிக்கேணி, அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயில், பெசன்ட் நகர், அருள்மிகு அஷ்டலெட்சுமி திருக்கோயில், திருவிடந்தை, அருள்மிகு நித்ய கல்யாண பெருமாள் திருக்கோயில், மாமல்லபுரம், அருள்மிகு ஸ்தல சயன பெருமாள் திருக்கோயில், சிங்கப்பெருமாள் கோவில், அருள்மிகு பாடலாத்ரி நரசிம்மர் திருக்கோயில், திருநீர்மலை, அருள்மிகு நீர்வண்ண பெருமாள் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களுக்கும் பக்தர்கள் அழைத்து செல்லப்படுவார்கள். இரண்டாவது திட்டத்தில் திருவல்லிக்கேணி, அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயில், திருநீர்மலை, அருள்மிகு நீர்வண்ண பெருமாள் திருக்கோயில், திருமுல்லைவாயில், அருள்மிகு பொன்சாமி பெருமாள் திருக்கோயில், திருவள்ளூர், அருள்மிகு வைத்திய வீர ராகவபெருமாள் திருக்கோயில், திருபெரும்புத்தூர், அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில், பூந்தமல்லி, அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோயில் உள்ளிட்ட திருக்கோயில்களுக்கும் பக்தர்கள் அழைத்துச் செல்லப்படுகின்றனர். இந்த இரண்டு திட்டங்களிலும் பக்தர்களுக்கு கட்டணமில்லா சிறப்பு தரிசனம் செய்து வைக்கப்பட்டு, திருக்கோயில் பிரசாதம், திருக்கோயில்கள் பற்றிய விவரங்கள் அடங்கிய கையேடுடன் மதிய உணவும் வழங்கப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published.