மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி, மூன்று நாள் பயணமாக ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கா சென்றுள்ளார். இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் அவர் பல உரையாடல்களை நடத்த திட்டமிட்டுள்ளார்.
தனது முகநூல் பக்கத்தில், ராகுல் காந்தி, “அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள டல்லாஸ் நகரில், புலம்பெயர்ந்த இந்தியர்கள் மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் உறுப்பினர்களால் அளிக்கப்பட்ட உற்சாகமான வரவேற்பில் நான் மகிழ்ச்சியடைந்தேன். இந்த பயணத்தின் போது, இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் மற்றும் நுண்ணிய உரையாடல்களை நடத்துவதற்காக நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் தளபக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “’டெக்சாஸின் டல்லாஸில் உள்ள நிகழ்வுகள் மற்றும் உரையாடல்களை முன்னெடுக்க நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன்’ என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது இந்திய – அமெரிக்க உறவுகளை மேலும் வலுப்படுத்தும் ஒரு முக்கியமான வாய்ப்பு எனக் கருதப்படுகிறது.

