நீண்ட காலமாகவே மிகப்பெரிய பதவியை எதிர்நோக்கியிருந்த நிலையில் குஷ்புவுக்கு அது அவருக்கு வந்து சேர்ந்துள்ளது.. இதனால் குஷ்புக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. கடந்த 2020 ஆண்டு, வானதி சீனிவாசனுக்கு தேசிய பொறுப்பு தரப்பட்டது.. தமிழிசை சவுந்தராஜன் ஆளுநரானார். தமிழகம் அறிந்த மிகப் பிரபலமாக இருக்கும் பெண் அரசியல்வாதியாக குஷ்பு அறியப்பட்ட நிலையில், தேர்தலில் சீட் தரப்பட்டதுடன், பாஜக செயற்குழு உறுப்பினராக இருக்கும் குஷ்புவுக்கு அதைவிட பெரிய பதவி எதுவும் கிடைக்காமலேயே இருந்தது. இப்போது, தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக அண்மையில் நியமித்துள்ளது மத்திய அரசு. பெண்கள் பிரச்சனைகள் குறித்த புகார்கள் வருவதும், அதிலும் தமிழ்நாட்டிலிருந்து வரும் புகார்கள் நிறைய இருப்பதால், அதனை விசாரிக்கவும் உறுப்பினர் பற்றாக்குறை உள்ளது.
இதனைத் தொடர்ந்து, பிரதமர் மோடியின் ஆலோசனையின் படி, தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக குஷ்பு நியமிக்கப்பட்டார்.தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நடிகை குஷ்பு இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் மூன்று ஆண்டுகள் வரை இப்பொறுப்பில் இருப்பார். பதவியேற்றதைத் தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் ‘முதலில் இந்தப்பதவியை எனக்கு அளித்த மோடி அவர்களுக்கும், இந்திய அரசாங்கத்திற்கும், NCW -வில் உள்ள அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்’ என பதிவிட்டுள்ளார்.
![](https://nritamil.com/wp-content/uploads/2023/02/FB_IMG_1677569777918.jpg)