இந்தியா வருகை தாமதமாகும் என டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அண்மையில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட புதிய மின்சார வாகன தயாரிப்பு கொள்கையின்படி ரூ.4,000 கோடிக்குமேல் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு இறக்குமதி வரிச் சலுகை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தியாவை மின்சார வாகன உற்பத்தியின் தலைநகரமாக மாற்றவும் டெஸ்லா போன்ற வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் அதிக முதலீடுகளை மேற்கொள்ளும் நோக்கிலும் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில் இந்தியாவுக்கு வந்து, மின்சார வாகனத் தயாரிப்பு தொடா்பாக எலான் மஸ்க், பிரதமா் மோடியுடன் ஆலோசனை மேற்கொள்வாா் என எதிா்பாா்க்கப்பட்டது.
இந்த பயணத்தின் போது, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, இந்தியாவில் டெஸ்லா கார் தொழிற்சாலை அமைப்பது குறித்தும், ஸ்டார்லிங்க் சேவை அறிமுகம் செய்வது குறித்த அறிவிப்பை வெளியிட இருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
டெஸ்லா தொடர்பாக முக்கியமான செயல்பாடுகள் இருப்பதால் இந்தியா வருகை தாமதாகிறது. ஆனால் இந்த ஆண்டின் பிற்பகுதியில் இந்தியா வருகை புரிவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.”எனப் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக இந்தியாவில் காா்களுக்கான இறக்குமதி வரி அதிகமாக இருப்பதால், அதை குறைக்குமாறு எலான் மஸ்க் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

