ஐபிஎல் தொடரின்போது காலில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்துகொண்டார் சிஎஸ்கே கேப்டன் தோனி

இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் மருத்துவம் மற்றவை முதன்மை செய்தி விளையாட்டு

சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனிக்கு, முழங்காலில் ஏற்பட்ட காயத்தை சரிசெய்ய மும்பை தனியார் மருத்துவமனையில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்ற தோனி, முதற்கட்ட போட்டிகளின் போதே எதிர்பாராத விதமாக முழங்காலில் அடிபட்டது. எனினும், ஐ.பி.எல் தொடரில் நீடிக்க அறுவை சிகிச்சை செய்யாமல், முதற்கட்ட சிகிச்சைகளை மட்டும் எடுத்துக் கொண்டு சி.எஸ்.கே. அணியை தொடர்ந்து வழிநடத்தி வந்தார்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த கடைசி ஐ.பி.எல். போட்டியில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்க, காயமடைந்த காலுடன் மைதானத்தை வலம் வந்தார் தோனி. காயம் காரணமாக அவதிப்பட்ட போதிலும், குஜராத் அணியை வீழ்த்தி ஐந்தாவது முறையாக சி.எஸ்.கே. அணிக்கு சாம்பியன் கோப்பையை வென்று கொடுத்தார்.
மேலும் உடல் ஒத்துழைத்தால், அடுத்தாண்டு ஐபிஎல் போட்டிகளிலும் விளையாடுவேன் என தெரிவித்தார். இது சென்னை ரசிகர்களை மட்டுமில்லாமல், பல கிரிக்கெட் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.
இந்த நிலையில், இடது முழங்காலில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை எடுக்க மும்பையில் உள்ள கோகிலா பென் மருத்துவமனைக்கு நேற்று காலை தோனி சென்றார். கடந்த டிசம்பர் மாதம் கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த ரிஷப் பண்ட்-க்கு அறுவை சிகிச்சைகளை மேற்கொண்ட மருத்துவரான தின்ஷா பர்திவாலா தான், தோனியின் முழங்கால் அறுவை சிகிச்சையை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த நிலையில், தோனி சில வாரங்கள் ஓய்வில் இருப்பார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மீண்டும் பழைய வேகத்துடன் தோனி ஓடுவதற்கு 2 மாதங்கள் ஆகலாம் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *