சென்னையில் சின்ன வெங்காய விலை 20 ரூபாய் உயர்ந்து ரூ. 220 ஆக அதிகரித்துள்ளது
சென்னையில் தக்காளி விலை கிலோவுக்கு 10 ரூபாய் குறைந்து 130 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சின்ன வெங்காயம் விலை கிலோவுக்கு 20 ரூபாய் உயர்ந்து 220 ரூபாயை எட்டியுள்ளதால் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர்.
கோயம்பேடு காய்கறி சந்தைக்கு நாள் ஒன்றுக்கு 1,100 டன் தக்காளி தேவை உள்ள நிலையில், கடந்த சில நாட்களாக வரத்து குறைந்ததால் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
அந்த வகையில் நேற்று ஒரு கிலோ தக்காளி மொத்த விற்பனையில் 100 ரூபாய்க்கும், சில்லறை விற்பனையில் 40 ரூபாய் உயர்ந்து 140 ரூபாய் என்ற புதிய உச்சத்தையும் தொட்டது.
இன்று கோயம்பேடு மொத்த சந்தையில் ஒரு கிலோ தக்காளி விலை மாற்றமின்றி 100 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேநேரம் சில்லறை விலையில் 10 ரூபாய் குறைந்து 130 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதேபோன்று, வரத்து குறைவால் சின்ன வெங்காயம் ஒரே நாளில் 20 ரூபாய் உயர்ந்து 220 ரூபாய்க்கு விற்பனையாகிறது.