இது குறித்து தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி கூறியதாவது: மனித குலத்தின் வரலாற்றை பழைய கற்காலம், இடைக்கற்காலம், புதிய கற்காலம், உலோக காலம் என வகைப்படுத்தலாம். பழனியில் கிடைத்த இக்கருவி புதியகற்காலத்தைச் சேர்ந்தது. இந்த காலத்தில்தான் தமிழ் வரலாற்றில் முதல் சங்க காலம் துவங்குகிறது. புதிய கற்காலக்கருவிகளை மனிதன், விலங்குகளை வேட்டையாடப் பயன்படுத்தினான். நமக்கு கிடைத்த கருவியின் முன் முனையும், பின்பகுதியும் உடைந்துள்ளன.
இதில் பழந்தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. மேற்புறத்தில் 8 எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. இவைதமிழ் எழுத்துக்கள். 5 எழுத்துக்கள் உயிர் மெய்யாகவும், 3 எழுத்துக்கள் குறில், நெடிலாகவும் உள்ளன. இந்த எழுத்துபொறிப்பை “தெந்னாடாந்” என வாசிக்க முடிகிறது. இதன்மூலம் கருவியின் உரிமையாளரை தென்நாடான் எனக்கொள்ளலாம். இக்கருவியின் எழுத்து பொறிப்பு இடமிருந்து வலமாக போகிறது. இந்த எழுத்துக்கள் சங்ககாலத் தமிழ்எழுத்துக்களான தமிழியின் முன்னோடிகளாக உள்ளன. ஆனால் குறில், நெடில் குறிகள் தமிழைப்போல்எழுத்துகளுடன் ஒட்டியிராமல் தனித்தனி எழுத்துகளாக எழுதப்பட்டுள்ளன.
இந்த எழுத்துக்கள் கூர்மையான வடிவம் கொண்ட தாமிரம் போன்ற உலோகத்தால் வடிக்கப்பட்டிருக்க வேண்டும். இக்கருவியின் காலத்தை சுமார் 7 ஆயிரம் ஆண்டுகள் என கணிக்கலாம். அதாவது கிமு 5 ஆயிரம். இரும்புபயன்பாட்டிற்கு வராத காலம். இக்கருவியின் காலம் இடைச்சங்க காலத்தைச் சேர்ந்தவையாக கணிக்கலாம். இக்கற்கால கருவி கிடைத்திருப்பதன் மூலம் தமிழ் மொழி மற்றும் தமிழ் எழுத்துக்களின் உலகளாவிய தொன்மைஉறுதிப்படுத்தப் படுகின்றது.இத்தகைய தொல்பொருள் ஆராய்ச்சிகளை தொடர மத்திய-மாநில அரசுகள் ஆவணசெய்ய வேண்டும். இன்னும் நம் பண்பாடு, நாகரீகத்தின் பெருமை ஓங்க வேண்டும்.