அயோத்தி ராமர் கோயில் கட்டமானம் முழுவதுமாக நிறைவடைந்ததையொட்டி கோயிலில் காவி கொடியை ஏற்றினார் பிரதமர்; வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு என நெகிழ்ச்சி

ஆன்மீக தளங்கள் ஆன்மீகம் இந்தியா இராசி பலன்கள் கடந்த நிகழ்ச்சிகள் கலை / கலாச்சாரம் கோயில்கள் சிறப்பு சுற்றுலா செய்திகள் திருவிழாக்கள் மற்றும் நிகழ்வுகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி

அயோத்தி ராமர் கோயிலின் கட்டுமான பணிகள் நிறைவந்ததையடுத்து, அந்த கோயில் கோபுரத்தில் பிரதமர் மோடி காவி கொடியை ஏற்றினார்.
உத்தரபிரதேசம் மாநிலம் அயோதிக்கு ஒரு நாள் பயணமாக வந்த பிரதமர் மோடி, அங்கு ரோடு ஷோ நடத்தினார். தொடர்ந்து அங்குள்ள கோயில்களுக்கு சென்று பிரதமர் வழிபட்டார். பின்னர் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்துடன் ராமர் கோயிலுக்கு சென்றார். அங்கு இருவரும் வழிபட்டனர். வடமாநில கட்டட கலைப்படி கட்டப்பட ஷிகார் எனப்படும் 161 அடி உயர கோபுரத்தில் பிரதமர் மோடி காவி நிற கொடியை ஏற்றினார்.
அந்த கோயிலின் கட்டுமான பணி முழுமையாக நிறைவடைந்ததை குறிக்கும் வகையில் இந்த கொடி ஏற்றப்பட்டது. முக்கோண வடிவில் 10 அடி உயரம், 20 அடி நீளம் கொண்ட இந்த கொடியில் சூரிய வடிவம் பதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஓம் என்றும் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்தி பென் படேல், முதலமைச்சர் யோகி ஆதித்யா நாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *