தூய்மையான நகரங்களின் பட்டியலில் இந்தூர் 8வது முறையாக விருது வென்றது.

அரசியல் இந்தியா சிறப்பு சுற்றுச் சூழல் சுற்றுலா செய்திகள்

தூய்மையான நகரங்களின் பட்டியலில் மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரம் 8வது முறையாக முதலிடத்தை பெற்றுள்ளது. தலைநகரங்களுக்கான பிரிவில் சென்னைக்கும் விருது வழங்கப்பட்டுள்ளது. ‘சுவச் சுவேக்ஷான்’ திட்டத்தின் கீழ், 2016ம் ஆண்டு முதல் இந்தியாவின் தூய்மை நகரங்கள் பட்டியல் வெளியிடப்படுகிறது. அந்த வகையில், 2024 மற்றும் 2025ம் ஆண்டுக்கான பட்டியலை ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டார்.குப்பைகளை கையாளுதல், பிளாஸ்டிக் கழிவுகளை குறைத்தல், நிர்வகித்தல், மறுபயன்பாடு, மறு சுழற்சிசெய்தல் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து தூய்மை நகரங்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டது.தேசிய அளவில் தூய்மையான நகரங்கள் பட்டியலில் தொடர்ந்து 8வது ஆண்டாக ம.பி.,யின் இந்தூர் முதலிடம் பிடித்துள்ளது. 2வது இடத்தில் சத்தீஸ்கரின் அம்பிகாபூரும், 3வது இடத்தில் கர்நாடகாவின் மைசூருவும் இடம்பிடித்துள்ளன.வெற்றி பெற்ற மாநகர நிர்வாகங்களுக்கு டில்லி விஞ்ஞான் பவனில் நடந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பரிசுகளை வழங்கி கவுரவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *