புதிய இணையதளம் : பெண்களுக்கு பாதுகாப்பான பணியிடங்களை உருவாக்கும் முயற்சி

இந்தியா சிறப்பு செய்திகள் முதன்மை செய்தி

பெண்கள் மேம்பாட்டு அமைச்சகம் ஒரு புதிய இணையதளத்தை உருவாக்கியுள்ளது, அதில் பெண்கள் பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் பற்றி புகார் செய்யலாம்.

இதுகுறித்து, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெண்களின் பணியிட பாதுகாப்பை பாதுகாக்க மத்திய அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.


இதையொட்டி Shebox.wcd.gov.in என்ற இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.
Shebox.wcd.gov.in என்ற இணையதளத்திற்கு இங்கே கிளிக் செய்யவும்.

Shebox.wcd.gov.in

பணிச்சூழலில் ஏற்படும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து பெண்கள் புகார் தெரிவிக்க இந்த இணையதளம் அனுமதிக்கிறது.

அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களும் புகார் அளிக்கலாம்.

புகார் அளிக்கப்பட்ட பிறகு அதன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதையும் நீங்கள் அறியலாம்.

மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் அன்னபூர்ணா தேவி கூறுகையில், 2013ல் இயற்றப்பட்ட பணியிட பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு மற்றும் தீர்வு) சட்டத்தின் கீழ் 2017ல் இணையதளம் தொடங்கப்பட்டது.

அதன் முற்றிலும் மேம்படுத்தப்பட்ட இணையதளம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் வரும் புகார்களுக்கு தீர்வு காண இரண்டு வகையான குழுக்கள் அமைக்கப்படும்.

தனியார் நிறுவன ஊழியர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண உள் விவகாரக் குழுவும், அரசு ஊழியர்களின் புகார்களுக்கு தீர்வு காண உள்ளூர் குழுவும் அமைக்கப்படும்.

மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும். புகார் அளித்தவர்களின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்படும்.

இதன் அடிப்படையில், இந்த குழுக்கள் மூலம் வழக்குப்பதிவு செய்து, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *