நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ள தேர்தல் ஆணையம், தமிழ்நாட்டில் மார்ச், ஏப்ரலில் நடைபெறும் திருவிழாக்கள், தேர்வுகள் தொடர்பான விவரங்களை மாநில அரசிடம் கோரியுள்ளது.
மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தேர்தல் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ள காலக்கட்டங்களில் ஒவ்வொரு மாநிலங்களிலும் நடைபெறும் திருவிழாக்கள், தேர்வுகள் ஆகியவற்றை கருத்தில்கொண்டு தேர்தலை நடத்த, தேர்தல் ஆணையம் நடடிவக்கை மேற்கொள்ளும்.
அந்த வகையில், தமிழ்நாட்டில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறும் திருவிழாக்கள் தொடர்பான விவரங்களை தமிழ்நாடு அரசிடம் தேர்தல் ஆணையம் கோரியுள்ளதாக மாநில தலைமைத் தேர்தல் ஆணையம் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
மேலும் புதிய வாக்காளர்களுக்கு மார்ச் மாதம் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட உள்ளதாகவும், புயல் வெள்ளத்தால் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் கண்ட்ரோல் யூனிட்டுகள் எதுவும் பாதிக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.
புதிய வாக்காளர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் மற்றும் வாக்குச்சாவடி மையங்களில் வாக்களிப்பதற்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளதாகவும் சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.
election commission ask details to tamilnadu govt for parliamentary election preparation

