அமெரிக்க அதிபர் டிரம்ப் பற்றிய விமர்சனத்துக்கு வருத்தம் தெரிவித்தார் எலான் மஸ்க்.

அமெரிக்கா அரசியல் உலகம் சிறப்பு செய்திகள்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குறித்து வெளியிடப்பட்ட பதிவுகள் வரம்பை மீறி சென்றுவிட்டதால் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன் என தொழிலதிபர் எலான் மஸ்க் வருத்தம் தெரிவித்துள்ளார்.குடியரசு கட்சியைச் சேர்ந்த அமெரிக்க அதிபர் டிரம்பின் நெருங்கிய நண்பராக போன மாதம் வரை இருந்த எலான் மஸ்க், தற்போது அவர் எதிரியாக மாறிவிட்டார். இருவரின் சமீபத்திய மோதல்களை உலகமே கவனித்து வருகிறது.டிரம்ப் நிர்வாகம் சமீபத்தில் அறிமுகப்படுத்திய செலவு மசோதாவுக்கு எலான் மஸ்க் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்த மசோதாவால் நாட்டின் கடன், 200 லட்சம் கோடி ரூபாயாக உயரும் என எலான் மஸ்க் விமர்சனம் செய்திருந்தார்.பின்னர், அதிபர் டிரம்ப் , ”எலான் மஸ்க்குடனான உறவு முடிந்துவிட்டது. அவர் அதிபர் பதவியின் மாண்புக்கு அவமரியாதை செய்துவிட்டார்” என அதிபர் டிரம்ப் அறிவித்தார். இதையடுத்து டிரம்ப், எலான் மஸ்க் ஆகிய இருவரும் மாறி மாறி விமர்சனம் செய்தனர். இதனால் இருவருக்கும் இடையே மோதல் உச்சத்தில் இருந்தது.தற்போது தனது நிலைப்பாட்டில் இருந்து எலான் மஸ்க் பின்வாங்கி உள்ளார். தற்போது அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ”கடந்த வாரம் அதிபர் டொனால்டு டிரம்ப் குறித்து வெளியிட்ட சில பதிவுகளுக்கு வருந்துகிறேன். வரம்பு மீறி சென்றுவிட்டதை உணர்கிறேன்”. என எலான் மஸ்க் தன் பதிவில் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *