தமிழ் நடிகர் நெப்போலியன் மகன் திருமணம் ஜப்பானில் கோலாகலமாக நடைபெற்றது; தமிழ் திரை பிரபலங்கள் பலர் பங்கேற்பு

இந்தியா உலகம் கடந்த நிகழ்ச்சிகள் கலை / கலாச்சாரம் சினிமா சுற்றுலா செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வட அமெரிக்கா ஜப்பான்

நடிகர் நெப்போலியனின் மூத்த மகன் தனுஷுக்கும், அக்ஷயா என்பவருக்கும் இடையே திருமணம் ஜப்பானில் இன்று நடந்து முடிந்துள்ளது, இதில் திரையுலகினர் ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த நெப்போலியன் 70-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். வில்லன், ஹீரோ, குணச்சித்திர நடிகர் என பல்வேறு வேடங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை பெற்றிருக்கிறார் நெப்போலியன். சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்ட பின்னர் திமுகவில் இணைந்த நெப்போலியன் சட்டமன்றத்திற்கு 2001-லும், நாடாளுமன்றத்திற்கு 2009 ஆம் ஆண்டும் தேர்வு செய்யப்பட்டார்.
மத்திய சமூக நீதி இணை அமைச்சராகவும் நெப்போலியன் பொறுப்பில் இருந்துள்ளார். தற்போது நெப்போலியன் அமெரிக்காவில் குடும்பத்துடன் செட்டிலாகி அங்கேயே வசித்து வருகிறார். அவருக்கு தனுஷ் மற்றும் குணால் என 2 மகன்கள் உள்ளனர். இவர்களில் மூத்தவரான தனுஷுக்கு தசை பிடிப்பு சம்பந்தமான அரிய வகை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தனுஷுக்கும், நெல்லையைச் சேர்ந்த அக்ஷயா என்பவருக்கும் இடையே திருமணம் சமீபத்தில் நிச்சயிக்கப்பட்டது. இந்நிலையில் மகனின் திருமணத்தை அவரது விருப்பப்படி நெப்போலியன் ஜப்பான் நாட்டில் வெகு விமர்சையாக நடத்தி முடித்துள்ளார்.
தனுஷ் மற்றும் அக்ஷயாவின் திருமணம் இந்திய நேரப்படி இன்று காலை 8 மணி அளவில் நடந்துள்ளது. இந்த திருமணத்தில் சரத்குமார், ராதிகா, குஷ்பூ, மீனா, கார்த்திக், பாண்டியராஜன், விதார்த் உள்பட திரைத்துறையினர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இதேபோன்று ஜப்பான் நாட்டிற்கான இந்திய தூதர் சிபி ஜார்ஜ் தனது மனைவியுடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். தனுஷுக்கு ஜப்பானுக்கு செல்ல வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாக இருந்துள்ளது. அதனை அவர் தனது தந்தையிடம் வெளிப்படுத்திய நிலையில் மகனின் திருமணத்தை ஜப்பானிலேயே நடத்தி முடித்துள்ளார் நெப்போலியன். இணையத்தில் வெளியாகி உள்ள தனுஷ் – அக்ஷயா திருமண புகைப்படங்களுக்கு நெட்டிசன்கள் ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *