ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் இயங்கி வரும் பகுதி தனி நகரமாக அங்கீகரிக்கப்பு.

அமெரிக்கா அரசியல் அறிவியல் மற்றும் அறிவியல் கண்டுபிடிப்புகள் உலகம் கண்டுபிடிப்பு சிறப்பு செய்திகள் விண்வெளி சார்ந்தவை

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் இயங்கி வரும் பகுதி ‘ஸ்டார்பேஸ்’ என்ற தனி நகரமாக அங்கீகரிக்கப்படவுள்ளது. இதற்கான வாக்கெடுப்பில் 212 பேர் ஆதரவாகவும், 6 பேர் எதிராகவும் வாக்களித்துள்ளனர். வாக்களித்த பலரும் ஸ்பேஸ் எக்ஸ் ஊழியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தின் தெற்கு பகுதியில் 3.9 சதுர கிலோ மீட்டர் நிலத்தை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க், கடந்த 2012- ஆம் ஆண்டு வாங்கினார். அங்கு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் அலுவலகங்கள், ஊழியர்களின் வீடுகளே அதிகமாக உள்ளன. எலான் மஸ்கின் வீடும் இந்த பகுதியிலே அமைந்துள்ளது. இந்த பகுதியை தனி நகரமாக அங்கீகரிப்பதற்கான மனு கடந்த ஆண்டு டிசம்பரில் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் சனிக்கிழமை அன்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஸ்டார்பேஸ் நகரத்தின் முதல் மேயராக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் துணை தலைவர் பாபி பெடென் செயல்படுவார் என்று கூறப்படுகிறது. இந்த பகுதியில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் நடவடிக்கைகள் காட்டுத்தீ உள்ளிட்ட விபத்துக்களையும், சுற்றுச்சூழல் பாதிப்புகளையும் ஏற்படுத்துவதாக அருகாமை பகுதியில் வசிக்கும் மக்கள் கூறுகின்றனர். ஸ்டார்பேஸ் என்ற புதிய நகரத்தை அங்கீகரிப்பதற்கு அம்மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *